/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ் டிரைவரிடம் தகராறுபோக்குவரத்து பாதிப்பு
/
பஸ் டிரைவரிடம் தகராறுபோக்குவரத்து பாதிப்பு
ADDED : பிப் 12, 2025 01:04 AM
பஸ் டிரைவரிடம் தகராறுபோக்குவரத்து பாதிப்பு
வாழப்பாடி,:வாழப்பாடியை சேர்ந்த வாலிபர், முத்தம்பட்டி கேட் அருகே, நேற்று இரவு, 9:00 மணிக்கு பைக்கில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருக்கும், எதிரே ஆத்துார் நோக்கி சென்ற தனியார் பஸ் டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பஸ்சை பின் தொடர்ந்த வாலிபர், வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில், பஸ் முன் பைக்கை நிறுத்தி வாக்குவாதம் செய்தார். அப்போது அங்கிருந்த ஒருவர், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபரிடம் கேட்க, அவர்கள் தாக்கிக்கொண்டனர். இதில் வாலிபருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர், பஸ்சை முற்றுகையிட்டனர். இச்சம்பவத்தால், வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 9:30 மணிக்கு, தனியார் பஸ் புறப்பட்டது. வாழப்பாடி போலீசார் போக்குவரத்தை சரிசெய்து, சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.