/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் டிரைவர் பலிஐ.டி., ஊழியர் படுகாயம்
/
விபத்தில் டிரைவர் பலிஐ.டி., ஊழியர் படுகாயம்
ADDED : பிப் 13, 2025 01:16 AM
விபத்தில் டிரைவர் பலிஐ.டி., ஊழியர் படுகாயம்
பெ.நா.பாளையம்:பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த வடுகத்தம்பட்டியை சேர்ந்த டிரைவர் மணிவண்ணன், 34. இவரது நண்பர், ஏத்தாப்பூரை சேர்ந்த, ஐ.டி., நிறுவன ஊழியர் தினேஷ்குமார், 36. இருவரும் நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, வைத்தியகவுண்டன்புதுார் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 'பஜாஜ் சி.டி., 100' பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
மணிவண்ணன், ஹெல்மெட் அணியாமல் ஓட்டினார். நிலை தடுமாறி விழுந்ததில், மணிவண்ணன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தினேஷ்குமார் படுகாயம் அடைந்து, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.