/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வன விழிப்புணர்வு முகாமில்'ட்ரெக்கிங்' சென்ற மாணவர்கள்
/
வன விழிப்புணர்வு முகாமில்'ட்ரெக்கிங்' சென்ற மாணவர்கள்
வன விழிப்புணர்வு முகாமில்'ட்ரெக்கிங்' சென்ற மாணவர்கள்
வன விழிப்புணர்வு முகாமில்'ட்ரெக்கிங்' சென்ற மாணவர்கள்
ADDED : பிப் 22, 2025 01:34 AM
வன விழிப்புணர்வு முகாமில்'ட்ரெக்கிங்' சென்ற மாணவர்கள்
ஏற்காடு:சேலம் மாவட்டத்தில், 10 அரசு பள்ளிகளில் இருந்து தலா, 10 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் நேற்று, சுற்றுச்சூழல், வனம் சார்ந்த விழிப்புணர்வு முகாமுக்கு, நேற்று ஏற்காடு அழைத்துச்செல்லப்பட்டனர். தொடர்ந்து, ஏற்காடு வனச்சரக அலுவலர் முருகன் தலைமையில் மாணவ, மாணவியர், சன்னியாசி மலை காப்புக்காட்டில், 3 கி.மீ., 'ட்ரெக்கிங்' சென்றனர். தொடர்ந்து படகு இல்லம் அருகே சூழல் சுற்றுலா பூங்காவில், விழிப்புணர்வு வகுப்பு நடந்தது. தொடர்ந்து வனம், சுற்றுச்சூழல் குறித்த வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. பின் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவ, மாணவியரின் பஸ்சை, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, கலெக்டர் பிருந்தாதேவி, மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி, கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.