/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பூரண மதுவிலக்கு கேட்டு தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
/
பூரண மதுவிலக்கு கேட்டு தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 23, 2025 01:32 AM
பூரண மதுவிலக்கு கேட்டு தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
ஆத்துார்:தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி, ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே, சேலம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில், மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. முன்னதாக, உடையார்பாளையத்தில் உள்ள காந்தி சிலையில் தொடங்கிய பேரணி, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிறைவடைந்தது.
அதில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்; பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும்; தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட வாசகங்களுடன் பதாகைகள் ஏந்தி வந்தனர்.
தொடர்ந்து மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ., சுபா, மாநில கேப்டன் மன்ற துணை செயலர் சுல்தான்பாஷா, ஆத்துார் வடக்கு
ஒன்றிய செயலர் பச்சமுத்து, மகளிர் அணியினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

