ADDED : மார் 10, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைப்பால் தந்தையைதாக்கிய மகன் கைது
சேலம்சேலம், மல்லமூப்பம்பட்டி ராமகவுண்டனுார் காட்டுவளவை சேர்நதவர் ஏழுமலை, 65. ஆடு வளர்க்கிறார். இவரது மகன் முருகன், 38. இவர், தந்தைக்கு தெரியாமல் ஆடு ஒன்றை எடுத்துச்சென்றார். இதுகுறித்து ஏழுமலை கேட்டதில், நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மகன் வீட்டை விட்டு சென்றுவிட்டு, நண்பர்களான மாதேஷ், 37, மற்றொரு முருகன், 42, ஆகியோருடன் மீண்டும் வீட்டுக்கு வந்து, ஏழுமலையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மகன் முருகன் உள்பட, 3 பேரும், பி.வி.சி., பைப்பால் தாக்கினர். காயம் அடைந்த ஏழுமலையை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவ
மனையில் சேர்த்தனர். அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்து, முருகன், அவரது நண்பர்கள் மாதேஷ், முருகன் ஆகியோரை கைது செய்தனர்.