தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கைதி ஆசனவாயில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

கைதி ஆசனவாயில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

கைதி ஆசனவாயில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்


ADDED : மார் 13, 2025 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2025 02:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கைதி ஆசனவாயில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

சேலம் :நாமக்கல் மாவட்டம் கரடிப்பட்டியை சேர்ந்தவர் சூர்யா, 25. வழிப்பறி வழக்கில் ஓராண்டு தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில், கடந்த செப்டம்பரில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் நாமக்கல் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அழைத்துச்சென்று, மீண்டும் போலீசார், சேலம் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது சிறை போலீஸ் மவுலீஸ்வரன், நரேஷ்குமார் சோதனை செய்தபோது அவரது ஆசனவாயிலில், சாதாரண மொபைல் போன், 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறை எஸ்.பி., வினோத் விசாரித்ததில், 'சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி தினேஷ், 36, என்பவர், மொபைல், கஞ்சா கொண்டு வந்தால், 15,000 ரூபாய் தருவதாக தெரிவித்தார்' என்றார். மொபைல், கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர், சூர்யா, தினேஷ் ஆகியோர், 2 மாதங்கள் உறவினர்களை சந்திக்க, எஸ்.பி., தடை விதித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us