/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுங்க வசூல் ஏலம் ரத்தால் அதிருப்தி
/
சுங்க வசூல் ஏலம் ரத்தால் அதிருப்தி
ADDED : மார் 15, 2025 02:25 AM
சுங்க வசூல் ஏலம் ரத்தால் அதிருப்தி
சேலம்:சேலம் மாவட்டத்தில் ஏற்காடு செல்லும் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிப்பது தொடர்பான ஏலம், கலெக்டர் அலுவலக அறை எண்: 208ல் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் பங்கேற்க, முன்வைப்பு தொகை செலுத்திய பலர், காலை, 10:00 மணி முதலே வந்து காத்திருந்தனர். ஆனால் அறிவித்தபடி ஏலம் நடத்தப்படவில்லை. மாறாக, அறை முகப்பில், 'நிர்வாக காரணங்களுக்கு மறு தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்படுகிறது' என, நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. அதை பார்த்து ஏலதாரர்கள் அதிருப்தியுடன் திரும்பினர்.
இதுகுறித்து ஏலதாரரான, கிழக்கு மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர் ஜெயந்தி கூறுகையில், ''30க்கும் மேற்பட்டோர் ஏலம் எடுக்க வந்தோம். அலுவலர் ஒருவர் கூட இல்லை. 'நோட்டீஸ்' அறிவிப்பை பார்த்து அதிருப்தி அடைந்தோம். அதிகாரிகள் முன்னதாக தெரிவிக்காமல் அலைக்கழித்துவிட்டனர். அடுத்த ஏலமாவது திட்டமிட்டு நடத்த வேண்டும்,'' என்றார்.