/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாயை தாக்கி மொபட் எரிப்பு'போதை' மகனுக்கு 'காப்பு'
/
தாயை தாக்கி மொபட் எரிப்பு'போதை' மகனுக்கு 'காப்பு'
ADDED : மார் 16, 2025 02:17 AM
தாயை தாக்கி மொபட் எரிப்பு'போதை' மகனுக்கு 'காப்பு'
இடைப்பாடி:இடைப்பாடி, வெள்ளாண்டிவலசை சேர்ந்த பிரபு மனைவி சாந்தி, 40. இவர்களது மூத்த மகன் ஆதித்யா, 21. லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு போதையில் வீட்டுக்கு வந்தார். அதற்கு சாந்தி, 'வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் குடிச்சிட்டு வர்றீயே' சாந்தி கேட்டார். இதில் கோபம் அடைந்த ஆதித்யா, தாயை தகாத வார்த்தையில் திட்டியதோடு, மத்துக்குச்சியால் அடித்துள்ளார். அவர் தப்பி ஓடிய நிலையில், 'என்னைக்கு இருந்தாலும் உன்னை கொல்லாமல் விடமாட்டேன்' என மிரட்டியுள்ளார். மேலும் தந்தை பிரபுவின் டி.வி.எஸ்., மொபட்டுக்கு தீ வைத்து எரித்துள்ளார். இதுகுறித்து சாந்தி புகார்படி, இடைப்பாடி போலீசார், ஆதித்யாவை நேற்று கைது செய்தனர். ஆதித்யா மீது கடந்த ஆண்டு ஆக., 6ல், இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு நிலுவையில் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.