/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காங்., பிரமுகர் வீட்டில் திருடியகள்ளக்குறிச்சி வாலிபர் சிக்கினார்
/
காங்., பிரமுகர் வீட்டில் திருடியகள்ளக்குறிச்சி வாலிபர் சிக்கினார்
காங்., பிரமுகர் வீட்டில் திருடியகள்ளக்குறிச்சி வாலிபர் சிக்கினார்
காங்., பிரமுகர் வீட்டில் திருடியகள்ளக்குறிச்சி வாலிபர் சிக்கினார்
ADDED : மார் 18, 2025 02:10 AM
காங்., பிரமுகர் வீட்டில் திருடியகள்ளக்குறிச்சி வாலிபர் சிக்கினார்
ஆத்துார்:ஆத்துார், ராணிப்பேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ், 67. காங்., மாவட்ட முன்னாள் தலைவரான இவர், தற்போது அந்த கட்சியில், சேலம் லோக்சபா தொகுதி சீராய்வு கமிட்டி பொறுப்பாளராக உள்ளார். ஆத்துார், காமராஜர் சாலையில், பிளைவுட் கடையும் வைத்துள்ளார்.
கடந்த, 15 காலை, அவர் மனைவியுடன் வெளியே சென்றுவிட்டு, இரவு, 11:00 மணிக்கு வந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 3 பவுன் சங்கிலி, ஒரு பவுன் மோதிரம், ஒரு கிலோ வெள்ளி கட்டி என, 3 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி ஆத்துார் டவுன் போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி'யில் பதிவான காட்சிகள் குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில் ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த, கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூரை சேர்ந்த ஹரிஹரன், 26, நேற்று போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். போலீசார், அவரை பிடித்து விசாரித்தபோது, செல்வராஜ் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். தங்க, வெள்ளி நகைகளை மீட்ட போலீசார், ஹரிஹரனை கைது செய்தனர். அவர் மீது ஆத்துார் டவுன் போலீசில் மட்டும், 9 திருட்டு வழக்குகள் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.