/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மதுக்கடையில் முதல்வர் படம்ஒட்ட முயன்ற பா.ஜ.,வினர் கைது
/
மதுக்கடையில் முதல்வர் படம்ஒட்ட முயன்ற பா.ஜ.,வினர் கைது
மதுக்கடையில் முதல்வர் படம்ஒட்ட முயன்ற பா.ஜ.,வினர் கைது
மதுக்கடையில் முதல்வர் படம்ஒட்ட முயன்ற பா.ஜ.,வினர் கைது
ADDED : மார் 20, 2025 01:17 AM
மதுக்கடையில் முதல்வர் படம்ஒட்ட முயன்ற பா.ஜ.,வினர் கைது
சேலம்:டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதை கண்டித்து, பா.ஜ., சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சேலம், முள்ளுவாடி கேட் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு, பா.ஜ., மகளிர் அணியினர் நேற்று வந்தனர். தொடர்ந்து, 'போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும் அப்பா' எனும் வாசகத்துடன், முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்ட முயன்றனர்.
டவுன் போலீசார், அவர்களை தடுத்தனர். மகளிர் அணியினர் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து முதல்வர் படத்தை ஒட்ட முயன்றதால், சேலம் மாநகர பா.ஜ., மகளிர் அணி தலைவி சுமதிஸ்ரீ உள்ளிட்ட மகளிர் அணியினர், அஸ்தம்பட்டி மண்டல தலைவர் சந்தோஷ், முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம் என, 6 பேரை, போலீசார் கைது செய்தனர்.
வளையமாதேவிஅதேபோல் ஆத்துார் அருகே வளையமாதேவி டாஸ்மாக் கடை முன், பா.ஜ.,வை சேர்ந்த, ஆத்துார் கிழக்கு ஒன்றிய தலைவர் அமுதா தலைமையில் கட்சியினர், 'அப்பா ஸ்டாலின் டாஸ்மாக் கடையில் ரூ.1,000 கோடி ஊழல்' என குறிப்பிடப்பட்ட முதல்வர் படத்தை மாட்டினார்.
ஆத்துார் ஊரக போலீசார், படத்தை அகற்ற முயன்றனர். இதில் போலீசார், பா.ஜ.,வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் முதல்வர் படம், சுவரொட்டியை போலீசார் அகற்றினர்.