/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
/
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
ADDED : மார் 25, 2025 01:11 AM
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
வெண்ணந்துார்:தென்னையில், 'ரூகோஸ்' எனப்படும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. வெண்ணந்துார், மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், நடுப்பட்டி, அலவாய்ப்பட்டி, அத்தனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் பரவல் அதிகரித்து வருகிறது. தென்னையை தாக்கி சாறு உறிஞ்சும் பூச்சிகளில், 'ரூகோஸ்' வெள்ளை ஈ முக்கியமானது. கடந்தாண்டிலும் ஈக்களின் தாக்குதல் அதிகமாகவே காணப்பட்டது.
தற்போது, கோடை காலம் என்பதால், ஈக்களின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளை நிற ஈக்கள், இலைகளுக்கு பின்னால் அமர்ந்து சாறு உறிஞ்சுகிறது.
இவற்றின் மீது வெள்ளை நிற மெழுகு இருப்பதால், இலைகளுக்கு பின்புறம் சுருள் வடிவத்தில் முட்டையிட்டு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பாதிப்புக்கு உள்ளான இலைகள் ஒரு சில நாட்களில் பச்சை நிறத்தில் இருந்து கருப்பு நிறத்திற்கு மாறுகின்றன. இதனை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெண்ணந்துார் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.