/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாதையில் வீடு கட்டும் பணிபொதுமக்கள் சாலை மறியல்
/
பாதையில் வீடு கட்டும் பணிபொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஏப் 10, 2025 02:19 AM
பாதையில் வீடு கட்டும் பணிபொதுமக்கள் சாலை மறியல்
சேலம்:பாதையில் வீடு கட்டும் பணியை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேலம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த மேட்டுப்பட்டி தாதனுார் ஊராட்சி கருப்பகவுண்டர் வட்டத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்கள், அப்பகுதியில் உள்ள பாதையை பயன்படுத்தி வந்த நிலையில், அங்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், வீடு கட்டும் பணியை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று, சேலம் - அரூர் பிரதான சாலையில், மேட்டுப்பட்டி தாதனுாரில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிக்கப்பட, அம்மாபேட்டை, வீராணம், காரிப்பட்டி போலீசார் வந்து, பேச்சு நடத்தினர்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் மக்கள், போராட்டத்தை கைவிட்டனர்.