/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை ஏற்காடு தொகுதியில்தி.மு.க., பாக முகவர் கூட்டம்
/
நாளை ஏற்காடு தொகுதியில்தி.மு.க., பாக முகவர் கூட்டம்
நாளை ஏற்காடு தொகுதியில்தி.மு.க., பாக முகவர் கூட்டம்
நாளை ஏற்காடு தொகுதியில்தி.மு.க., பாக முகவர் கூட்டம்
ADDED : ஏப் 12, 2025 01:47 AM
நாளை ஏற்காடு தொகுதியில்தி.மு.க., பாக முகவர் கூட்டம்
சேலம்:ஏற்காடு சட்டசபைக்கான தி.மு.க., பாக முகவர் கூட்டம் நாளை நடக்க உள்ளது.இதுகுறித்து, தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் அறிக்கை: ஏற்காடு சட்டசபை தொகுதி பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், நாளை(ஏப்., 13) நடக்க உள்ளது. வாழப்பாடி வடக்கு, தெற்கு, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு, வாழப்பாடி பேரூர், பேளூர் ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கு, காலை, 10:00 மணிக்கு, வாழப்பாடியில் உள்ள ஸ்டாலின் அறிவாலயத்தில் நடக்கும்.
அயோத்தியாப்பட்டணம் தெற்கு, வடக்கு ஒன்றியம் மற்றும் அயோத்தியாபட்டணம் டவுன் பஞ்சாயத்தை சேர்ந்தவர்களுக்கு அயோத்தியாப்பட்டணம் கஸ்துாரிபாய் திருமண மண்டபத்தில், மதியம், 3:00 மணிக்கு நடக்கும். மாவட்ட நிர்வாகிகள், கட்சி தலைமையால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர், ஒன்றிய, பேரூர் செயலர்கள், அணி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.