/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்திறப்பு : 15,000 கனஅடியாக குறைப்பு
/
மேட்டூர் அணை நீர்திறப்பு : 15,000 கனஅடியாக குறைப்பு
மேட்டூர் அணை நீர்திறப்பு : 15,000 கனஅடியாக குறைப்பு
மேட்டூர் அணை நீர்திறப்பு : 15,000 கனஅடியாக குறைப்பு
ADDED : ஜூலை 12, 2011 12:39 AM
மேட்டூர்: மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு நேற்று காலை, 6 மணி முதல் விநாடிக்கு, 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா குறுவை சாகுபடிக்காக, ஜூன் 6ம் தேதி நீர்திறக்கப்பட்டது. பாசன பகுதியில் நடவு பணி துவங்கியதால் டெல்டா நீர்திறப்பு ஜூலை1 முதல் விநாடிக்கு, 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. பாசனத்துக்கான நீர்தேவை குறைந்ததால், ஜூலை 7ம் தேதி நீர்திறப்பு விநாடிக்கு, 18 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. பாசன பகுதியில் பெரும்பாலான இடங்களில் நடவு பணி முடிந்ததால் டெல்டா நீர்திறப்பு நேற்று காலை, 6 மணி முதல் விநாடிக்கு, 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை அணை நீர்மட்டம், 88.330 அடியாகவும், நீர் இருப்பு, 50.765 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு, 3, 226 கனஅடி நீர்வந்தது.