/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறப்பு பஸ்கள் இயக்கம் ரூ.16 கோடி வருவாய்
/
சிறப்பு பஸ்கள் இயக்கம் ரூ.16 கோடி வருவாய்
ADDED : ஜன 18, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறப்பு பஸ்கள் இயக்கம் ரூ.16 கோடி வருவாய்
சேலம், :தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் கோட்டத்தில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு தடங்களில், 1,900க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறையால், சொந்த ஊர் செல்வோரின் வசதிக்கு சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர், திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு தடங்களில் கூடுதலாக, 750 சிறப்பு பஸ்கள், கடந்த, 10 முதல், 14 வரை இயக்கப்பட்டன. இதன்மூலம், 16.48 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம். மேலும் வரும், 20 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.