/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவலாளி ஆதார் கார்டில் மோசடி செய்து வீட்டு கடன் வாங்க முயன்ற 3 பேர் கைது
/
காவலாளி ஆதார் கார்டில் மோசடி செய்து வீட்டு கடன் வாங்க முயன்ற 3 பேர் கைது
காவலாளி ஆதார் கார்டில் மோசடி செய்து வீட்டு கடன் வாங்க முயன்ற 3 பேர் கைது
காவலாளி ஆதார் கார்டில் மோசடி செய்து வீட்டு கடன் வாங்க முயன்ற 3 பேர் கைது
ADDED : ஆக 26, 2024 02:56 AM
சேலம்: காவலாளியின் ஆதார் கார்டில் மோசடி செய்து வீட்டு கடன் வாங்க முயன்ற, கடை உரிமையாளர் உள்பட, 3 பேரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், அம்மாபேட்டை, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் செல்வம், 58. ராமகிருஷ்ணா சாலையில் உள்ள ஓட்டலில் காவ-லாளியாக பணிபுரிகிறார். இவர் மனைவிக்கு ஆதார் கார்டு எடுக்க, சுகவனேஸ்வரர் கோவில் வணிக வளாகத்தில் உள்ள கடைக்கு சென்றார்.
அதன் உரிமையாளரான, அம்மாபேட்டை, அர்த்தனாரி தெருவை சேர்ந்த வினோத்குமார், 29, என்பவரிடம் கேட்டுள்ளார். அவர், செல்வம் ஆதார் கார்டு, அவரது மனைவியின் போட்டோவை பெற்றுக்கொண்டு புது ஆதார் கார்டு எடுத்துத்தருவதாக கூறினார்.
நேற்று முன்தினம் செல்வம், அந்த கடைக்கு சென்று கேட்டார். அப்போது வினோத்குமார், ஆதார் கார்டை வைத்து மோசடி செய்ய முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்தது. உடனே சேலம் டவுன் போலீசில் செல்வம் புகார் கொடுத்தார்.
போலீசார் அங்கு வந்து பார்த்தபோது செல்வம் ஆதார் கார்டு முக-வரியில் பொன்னம்மாபேட்டை சத்யா நகரை சேர்ந்த செந்தில், 42, என்பவரது போட்டோவை வைத்து, ஆதார் கார்டை போலி-யாக உருவாக்கி வங்கியில் வீட்டு கடன் வாங்க முயன்றது தெரிந்-தது. இதற்கு வினோத்குமாருக்கு உடந்தையாக, கோட்டையை சேர்ந்த யாதவ் காந்த், 25, பொன்னம்மாபேட்டை செந்தில், 42, ஆகியோரும் செயல்பட்டது தெரிந்தது. இதனால் வினோத்குமார் உள்பட, 3 பேரையும், போலீசார் கைது செய்தனர்.

