/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புகை மண்டலத்தில் தப்ப 50 மீ., தார்ச்சாலைநெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

ADDED : ஜன 30, 2025 01:09 AM
புகை மண்டலத்தில் தப்ப 50 மீ., தார்ச்சாலைநெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?
பனமரத்துப்பட்டி,:சேலம் மாவட்டம் மல்லுார் பிரிவில், சேலம் - நாமக்கல் நான்கு வழிச்சாலையில், பாலம் கட்டுமான பணி நடக்கிறது. இதனால் நாமக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து, சேலம் வரும் வாகனங்கள், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. குறிப்பாக நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள், பழைய சாலை மற்றும் பாலம் வழியே சென்று, மீண்டும் நெடுஞ்சாலையில் இணைந்து சேலம் செல்கின்றன.
ஆனால் நெடுஞ்சாலை மற்றும் பழைய சாலை இடையே, மண் பாதை உள்ளது. தினமும் ஏராளமான வாகனங்கள், இடைவிடாமல் செல்வதால், அந்த மண் சாலையில் புழுதிப்படலம் ஏற்படுகிறது. இதனால் பழைய சாலையோரம் குடியிருக்கும், கே.எஸ்.ஆர்., நகர் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'மண் பாதையாக உள்ளதால், 24 மணி நேரமும் புகை பறக்கிறது. வீட்டு முன் தார்ப்பாய் கட்டினாலும் மண் புகை குடிநீர், சாப்பாடு மீது படிந்து விடுகிறது. மூச்சு திணறலுக்கு ஆளாகிறோம். குடியிருக்கவே முடியவில்லை. மண் பாதையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும்' என்றனர்.
மல்லுார் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் கூறுகையில், ''அங்கு கடந்த வாரம், மண் சாலை வளையில் திரும்பிய கார், அரசு பஸ்  மோதியது. அதை பார்க்க, பஸ்சில் இருந்து இறங்கிய கண்டக்டர், கிரேன் மோதி பலியானார். நெடுஞ்சாலை மற்றும் பழைய சாலைக்கு இடையே உள்ள மண் பாதையில், 50 மீ., நீளத்துக்கு தார்ச்சாலை அமைத்தால், விபத்தை தவிர்க்கலாம். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்து ஒரு வாரமாகியும் நடவடிக்கை இல்லை,'' என்றார்.