/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நண்பர் வீட்டில் திருடியோர் கைதுநகைகள், ரூ.50,000 மீட்பு
/
நண்பர் வீட்டில் திருடியோர் கைதுநகைகள், ரூ.50,000 மீட்பு
நண்பர் வீட்டில் திருடியோர் கைதுநகைகள், ரூ.50,000 மீட்பு
நண்பர் வீட்டில் திருடியோர் கைதுநகைகள், ரூ.50,000 மீட்பு
ADDED : மார் 02, 2025 01:28 AM
நண்பர் வீட்டில் திருடியோர் கைதுநகைகள், ரூ.50,000 மீட்பு
ஜலகண்டாபுரம்:ஜலகண்டாபுரத்தை சேர்ந்த தங்கப்பன் மனைவி பழனியம்மாள், 55. அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் பூக்கடை வைத்துள்ளார். இவரது மகன்கள் ரமேஷ், 32, சுரேஷ், 29. சுரேஷ், தாய்க்கு உதவியாக பூக்கடையில் தங்கிக்கொள்வார். ரமேஷ் வீட்டில் படுத்துக்கொள்வார்.
கடந்த, 27ல் ரமேஷ், நண்பர்களுடன் வீட்டில் படுத்திருந்தார். மறுநாள் அதிக பூ கட்ட வேண்டும் என்பதால், ரமேைஷ அழைக்க, பழனியம்மாள் வீட்டுக்கு வந்தார்.
அப்போது யாரும் இல்லாததோடு, கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள், பீரோவில் பார்த்தபோது, தலா, 5 பவுனில் இரு சங்கிலிகள், தோடு, ஜிமிக்கி, மோதிரம், சில்வர் குடத்தில் இருந்த பணத்தை காணவில்லை.
இதுகுறித்து பழனியம்மாள் புகார்படி, ஜலகண்டாபுரம் போலீசார் விசாரித்தனர். அதில் தாரமங்கலம் அருகே காட்டம்பட்டியை சேர்ந்த மணிகண்டன், 30, ஜலகண்டாபுரம், சித்தாயிக்காடு கார்த்தி, 25, ஆகியோர் திருடியது தெரிந்தது.
இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், நகைகள், 50,000 ரூபாயை மீட்டனர்.போலீசார் கூறுகையில், 'கைதான இருவரும், ரமேஷின் நண்பர்கள். அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற நிலையில், கைவரிசை காட்டியுள்ளனர். இருவர் மீதும் ஏற்கனவே வழக்குகள் உள்ளன' என்றனர்.