/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பேய்' வேடத்தில் வாலிபர் சேட்டை பயணியர், மாணவியர் அலறல்
/
'பேய்' வேடத்தில் வாலிபர் சேட்டை பயணியர், மாணவியர் அலறல்
'பேய்' வேடத்தில் வாலிபர் சேட்டை பயணியர், மாணவியர் அலறல்
'பேய்' வேடத்தில் வாலிபர் சேட்டை பயணியர், மாணவியர் அலறல்
ADDED : ஆக 31, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை, 5:00 மணிக்கு, கறுப்பு, வெள்ளை நிற உடையில், 'பேய்' வேடமிட்ட ஒருவர், அப்பகுதியில் நடமாடினார். இதனால் அங்கு காத்திருந்த பய-ணியர் சிலர் அச்சத்தில் ஓடினர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாண-வியர், குழந்தைகள் அச்சப்பட்டனர். இதை சிலர், போட்டோ, வீடியோ எடுத்து, வலைதளத்தில் பரவவிட்டனர். இதை அறிந்து வாழப்பாடி போலீசார் அங்கு வந்து விசாரித்தனர்.
போலீசார் கூறுகையில், 'பிராங்க் வீடியோவுக்கு, பேய் போன்று வேடமிட்டு வாலிபர் நடமாடியது விசாரணையில் தெரியவந்தது. நாங்கள் வந்ததும் தப்பி ஓடிவிட்டார்' என்றனர்.