/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊழியர் விரோதப்போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
ஊழியர் விரோதப்போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 31, 2024 01:31 AM
சேலம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேலம், சத்திரத்தில் உள்ள நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன், ஊழியர் விரோதப்போக்கை கண்டித்து பெருந்திரள் முறை-யீடு நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் திருவேரங்கன் தலைமை வகித்தார்.
அதில் நரசிங்கபுரம் நகராட்சியில் மோட்டார் இயக்குபவராக பணிபுரியும் செந்தில்குமார், கிருஷ்ணகிரி நகராட்சி மின்கம்பி உத-வியாளர் வெங்கடேசன் மீது விரோதப்போக்கை கையாண்டு எடுத்த, விடுப்பு ஆணையை உடனே ரத்து
செய்ய வேண்டும். அவர்களுக்கு மீண்டும் அதே நகராட்சியில் பணி வழங்க வலியு-றுத்தப்பட்டது. மாவட்ட செயலர் சுரேஷ், பொருளாளர் செல்வம், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில பொதுச்-செயலர்
தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.