/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தமிழக அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
தமிழக அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 07, 2024 08:11 AM
சேலம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேலம், சத்திரத்தில் உள்ள நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட நிர்வாகி சண்முகம் தலைமை வகித்தார்.
அதில் நரசிங்கபுரம் நகராட்சியில் மோட்டார் இயக்குபவராக பணிபுரிந்தவரையும், கிருஷ்ணகிரி நகராட்சியில் மின் கம்பி உதவியாளராக பணிபுரிந்த இருவர் மீதும் எடுக்கப்பட்ட ஊழியர் விரோத நடவடிக்கையை கைவிட்டு, மீண்டும் அவர்கள் பணிபுரிந்த நகராட்சியில் பணி வழங்க வலியுறுத்தினர். மாவட்ட செயலர் சுரேஷ், தமிழக அரசினர் தொழில் பயிற்சி அலுவலர் சங்க மாநில பொருளாளர் திருநாவுக்கரசு, ஓய்வூதியர் சங்க நிர்வாகி கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.