/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடிப்படை வசதி கேட்டு மறியல் நகராட்சி அலுவலகம் முற்றுகை
/
அடிப்படை வசதி கேட்டு மறியல் நகராட்சி அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதி கேட்டு மறியல் நகராட்சி அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதி கேட்டு மறியல் நகராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : ஆக 13, 2024 07:58 AM
ஆத்துார்: முல்லைவாடி, முத்து நகர் மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு, சாலை மறியல், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆத்துார், முல்லைவாடி முத்து நகர் பகுதியில், 100க்கும் மேற்-பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு சாலை, குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு, ஐந்து ஆண்டுகளாக சேலம் கலெக்டர், ஆத்துார் ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அலுவலர்களிடம் மனு அளித்து வருகின்றனர். இதுவரை அடிப்-படை வசதி செய்து தராததால், நேற்று ஆத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகில், கடைவீதி சாலை பகுதியில் முல்லைவாடி பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்-பவ இடத்துக்கு வந்த ஆத்துார் டவுன் போலீசார், 'நகராட்சி அலு-வலகம் சென்று முறையிட வேண்டும். பொதுமக்கள் பயன்ப-டுத்தும் சாலையை மறிப்பது சரியானது இல்லை,' என்றனர். அதன்பின், பொதுமக்கள் ஆத்துார் நகராட்சி அலுவலகத்தை முற்-றுகையிட்டனர். நகராட்சி தலைவர் நிர்மலாபபிதா சென்ற வாக-னத்தை சிறை பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்க-ளிடம் நகராட்சி தலைவர், 'முத்துநகர் பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்' என கூறி மனுவை பெற்றுக் கொண்டார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்-றனர்.