/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துாய்மை பணியாளர் சாலை மறியல் சென்னைக்கு அனுமதித்த போலீசார்
/
துாய்மை பணியாளர் சாலை மறியல் சென்னைக்கு அனுமதித்த போலீசார்
துாய்மை பணியாளர் சாலை மறியல் சென்னைக்கு அனுமதித்த போலீசார்
துாய்மை பணியாளர் சாலை மறியல் சென்னைக்கு அனுமதித்த போலீசார்
ADDED : ஆக 26, 2024 02:56 AM
தலைவாசல்: கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த துாய்மை பணியாள-ரான, 57 பேர், கொரோனா காலத்தில் பணியாற்றிய நிலுவைத்-தொகை கேட்டு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க, நேற்று முன்தினம் இரவு, துாய்மை பணியாளர்களின் மேலாளர் நாகேந்திரன் தலை-மையில், 54 பெண்கள் உள்பட, 57 பேர், ஒரு பஸ்சில் சென்னை நோக்கி புறப்பட்டனர்.
இதை தாமதமாக அறிந்த கோவை போலீசார், சேலம், கள்ளக்கு-றிச்சி மாவட்ட போலீசாருக்கு தகவல் அளித்தனர். நேற்று முன்-தினம் நள்ளிரவு 12:30 மணிக்கு, சேலம் மாவட்ட
எல்லையில் உள்ள தலைவாசல், நத்தக்கரை சுங்கச்சாவடிக்கு பஸ் வந்தபோது, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் நிறுத்தி கோவைக்கு திரும்ப அறிவுறுத்தினர்.
அவர்கள் செல்ல மறுத்து, சுங்கச்சாவடி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து பஸ்சில் இருந்த துாய்மை பணியாள-ரான, உக்கடத்தை சேர்ந்த ஸ்ரீவித்யா, 39, வெளியே குதித்தார். இதில் காயம் அடைந்த அவரை, ஆம்புலன்ஸ் மூலம் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து மீண்டும் அழைத்துச்சென்றனர். அதேநேரம், துாய்மை பணியாளர்களிடம் பேச்சு நடத்தி, பின் சென்னை செல்ல  அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை, 2:00 மணிக்கு அவர்கள் புறப்பட்டனர்.

