/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டை பூட்டி 90 வயது முதியவரை வெளியேற்றிய மகன் சப் - கலெக்டர் அலுவலகத்தில் புகார்
/
வீட்டை பூட்டி 90 வயது முதியவரை வெளியேற்றிய மகன் சப் - கலெக்டர் அலுவலகத்தில் புகார்
வீட்டை பூட்டி 90 வயது முதியவரை வெளியேற்றிய மகன் சப் - கலெக்டர் அலுவலகத்தில் புகார்
வீட்டை பூட்டி 90 வயது முதியவரை வெளியேற்றிய மகன் சப் - கலெக்டர் அலுவலகத்தில் புகார்
ADDED : ஆக 31, 2024 01:30 AM
மேட்டூர்: வீட்டை பூட்டி மகன் வெளியேற்றி விட்டதாக, 90 வயது முதி-யவர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
சேலம் மாவட்டம் மேச்சேரி, வெள்ளாறு ஊராட்சி எருமப்பட்-டியை சேர்ந்தவர் ரங்கன், 90. இவரது மகன்கள் சித்தையன், 60, பிரபாகரன், 54. இதில் சித்தையன் அதே ஊரில் மோட்டார் காயில் கட்டும் வேலையும், பிரபாகரன்
வெள்ளாறு அரசு மேல்நிலைப்-பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிகின்றனர். ரங்கன் மனைவி, 9 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். அதற்கு முன்பே, சொத்துகளை இரு மகன்களுக்கும் ரங்கன் பிரித்துக்கொ-டுத்து விட்டார். அதில், 1.30 ஏக்கர் நிலம், எருமப்பட்டியில் உள்ள வீட்டை மட்டும், அவரது
காலத்துக்கு பின் பிரித்துக்கொள்ள ரங்கன் கூறியுள்ளார். தற்போது ரங்கன் சொந்த வீட்டில் வசித்த நிலையில், கடந்த, 17ல் அங்கு சித்தையன் வந்தார். தொடர்ந்து வீட்டை விற்று பணம் தரும்படி கேட்டார். அதற்கு ரங்கன்
மறுத்தார். இதில் ஆத்திரம் அடைந்த சித்தையன், தந்தையை வீட்டில் இருந்து வெளியேற்றி பூட்டு போட்டார். உடைகள், மருந்து, மாத்திரைகள், வீட்டில் இருந்ததால் எடுக்க முடியாமல் தவித்தார். இந்நிலையில் நேற்று பிரபாகரன் மகன் கோகுல்ராஜ் உள்ளிட்ட உறவினர்கள், ரங்கனை, மேட்டூர் சப் - கலெக்டர் அலுவலகத்-துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர், 'மகனிடம் இருந்து வீட்டை மீட்டு தர வேண்டும்' என, சப் -
கலெக்டரின் நேர்முக உதவியாளர் புரு ேஷாத்தமனிடம் மனு கொடுத்தார். இதுகுறித்து வெள்ளாறு வி.ஏ.ஓ., மைதிலி கூறுகையில், ''முதி-யவர் மனு தொடர்பாக, அவரது வீட்டை பார்த்துவிட்டு மகனை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் வெளியூர் மருத்துவம-னையில் உள்ளதாக கூறிவிட்டார்.
இதுகுறித்து தாசில்தாருக்கு அறிக்கை அனுப்பி, சப் - கலெக்டர் உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.