/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பழ வியாபாரியிடம் தாலி சங்கிலி பறிப்பு
/
பழ வியாபாரியிடம் தாலி சங்கிலி பறிப்பு
ADDED : ஆக 01, 2024 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி அருகே காகாபாளையம் சாலை, தானகுட்டி-பாளையத்தை சேர்ந்த பெருமாள் மனைவி சுந்தரவல்லி, 60.
இவர் வீடு அருகே சாலையோரம் கொய்யா, வெள்ளரிபிஞ்சு-களை விற்கிறார். நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு இரு-சக்கர வாகனத்தில் வந்த, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர், கொய்யாபழம் கேட்டார். அவர், எடை போடும்போது, அவர் அணிந்திருந்த, 2 பவுன் தாலி சங்கிலியை பறித்து தப்பி விட்டார். இதில் சுந்தரவல்லி கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.