/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் 2 கால்களும் துண்டான தறி உரிமையாளர் ரயிலை நிறுத்தி ஏற்றிச்சென்றும் உயிரிழந்த சோகம்

ADDED : செப் 02, 2024 02:19 AM
சேலம்: விருதாசலம் - சேலம் பயணியர் ரயிலில் அடிபட்ட தறி உரிமை-யாளருக்கு இரு கால்களும் துண்டாகின. உடனே அந்த ரயிலை நிறுத்திய பணியாளர்கள், அவரை காப்பாற்ற ஏற்றிக்கொண்டு சேலம் வந்த நிலையில் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் நேற்று முன்-தினம் மாலை, 4:30 மணிக்கு, விருதாசலம் - சேலம் பயணியர் ரயில் வந்தது. அப்போது, 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தண்டவாளத்தை கடக்க முயன்று
ரயிலில் அடிபட்டு துாக்கி வீசப்-பட்டார். இதை கவனித்த லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார்.ரயில் ஊழியர்கள், பயணியர், இரு கால்களும் துண்டாகி உயி-ருக்கு போராடியவரை ரயிலில் ஏற்றி, சேலம் டவுன் ஸ்டேஷ-னுக்கு கொண்டு வந்தனர். அங்கு தயாராக இருந்த, அவசரகால ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பரிசோதித்து
பார்த்ததில் அவர் இறந்து விட்டது தெரிந்தது.உடலை கைப்பற்றி சேலம் ரயில்வே போலீசார் விசாரித்ததில் சேலம், அமானி கொண்டலாம்பட்டி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன், 54, என்பது தெரிந்தது. வீட்டில் இரு விசைத்தறிகளை வைத்து இயக்கி வந்ததும் தெரிந்-தது. அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவிலுக்கு சென்று திரும்பி-யபோது ரயிலில் அடிபட்டது தெரிந்தது.