/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனல் மின் நிலைய வளாகத்தில் தொழிலாளர் போராட்டம் நீடிப்பு
/
அனல் மின் நிலைய வளாகத்தில் தொழிலாளர் போராட்டம் நீடிப்பு
அனல் மின் நிலைய வளாகத்தில் தொழிலாளர் போராட்டம் நீடிப்பு
அனல் மின் நிலைய வளாகத்தில் தொழிலாளர் போராட்டம் நீடிப்பு
ADDED : மார் 02, 2025 07:04 AM
மேட்டூர்: தி.மு.க., அரசு, கடந்த சட்டசபை தேர்தலின்போது, 153வது பிரிவில், மின் கழக ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்தது. அதை நிறைவேற்றாததால், சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலைய வளாகத்தில், நேற்று முன்தினம் பல்வேறு ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள், பொது ஒப்பந்த தொழிலாளர் சங்கம் பெயரில் வேலையை புறக்க-ணித்து போராட்டம் நடத்தினர். சிலர், மின்மாற்றி, மின்கம்பங்-களில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சு நடத்த வரவில்லை. இந்நிலையில், 2ம் நாளாக நேற்றும், தொழி-லாளர்கள், அனல் மின் நிலைய வளாகத்தில் அமர்ந்து, வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். இதில், 100க்கும் மேற்-பட்டோர் பங்கேற்றனர்.