ADDED : மே 03, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம் பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் பிரபாகரன், மாநில சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் கோபிநாத் ஆகியோர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:கன்னங்குறிச்சி புது ஏரியை நம்பி, ஏராளமான ஏக்கர்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
வெயில் அதிகரிப்பால் புது ஏரி வறண்டு அப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன், கால்வாய் பகுதிகளை துார்வாரி, நீர் கொள்ளளவை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மல்லமூப்பம்பட்டி ஏரியை துார்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் வழித்தடங்களை சுத்தப்படுத்த வேண்டும். சேலத்தாம்பட்டி ஏரியில் துார்வாரி, குடியிருப்புகளுக்குள் நீர் புகாதபடி கரையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.