மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி ஊராட்சி எர்ணாபுரத்தில் மகுடாம்பிகை, மகுடேஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு, 8ம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, நேற்று காலை தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதற்கு கூடலுார் முத்து முனியப்பன் கோவில் வளாகத்தில் இருந்து, ஏராளமான பக்தர்கள், பல்வேறு புண்ய நதிகளில் இருந்து கொண்டு வந்த தீர்த்தங்களை, குடங்களில் நிரப்பி பூஜை செய்து தலையில் சுமந்தபடி புறப்பட்டனர். சுப்ரமணியர், மாரியம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில் வழியே, மகுடேஸ்வரர் கோவில் வளாகத்தை அடைந்தனர். பின் அங்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
காவடி ஊர்வலம்
கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள சிவசுப்ரமணியர் கோவிலில் நேற்று ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, 10க்கும் மேற்பட்டோர் காவடி சுமந்து முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். ஏராளமான பக்தர்களும் பங்கேற்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேரோட்டம் கோலாகலம்
தாரமங்கலம், மாட்டையாம்பட்டி அருகே வைரமுனீஸ்வரன் கோவிலில் தேரோட்டம் நேற்று நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மேல், வைரமுனீஸ்வரன் சுவாமியை தேரில் எழுந்தருள செய்தனர்.
தொடர்ந்து மலையை சுற்றி, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்று, கோவிலில் நிலை நிறுத்தப்பட்டது.