/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'குப்பை கொட்டக்கூடாது' விவசாயிகள் எதிர்ப்பு
/
'குப்பை கொட்டக்கூடாது' விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : ஜன 11, 2025 01:49 AM
சங்ககிரி,: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில் அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் உள்ள குறுக்குப்பாறையூரில் மக்கள், விவசாயிகளை பாதிக்கும்படி, குப்பை கழிவை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட செயலர் ராமமூர்த்தி பேசுகையில், ''கடந்த, 2024 ஜூன் முதல் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், குப்பை கொட்டப்படுகிறது. உயரமான பாறைகள் கொண்ட இடமாக இருப்பதால் மழைக்
காலங்களில் குப்பை நீர்நிலைகளில் கலந்து குடிநீரும், விவசாயமும் பாதிக்கப்படுகிறது. குப்பையை வேறு பகுதியில் கொட்ட வேண்டும்,''
என்றார்.தமிழக பால் உற்பத்தியாளர் சங்க மாநில செயலர் பெருமாள், தலைவர் மணி, விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலர் தங்கவேல், உள்பட பலர் பங்கேற்றனர்.