ADDED : ஜன 24, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழுதான பஸ்சால் மாணவர்கள் அவதி
கெங்கவல்லி, : ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கெங்கவல்லி வழியே வலசக்கல்பட்டிக்கு அரசு டவுன் பஸ் (தடம் எண்: 33) இயக்கப்படுகிறது. இந்த பஸ், நேற்று மாலை, 6:10 மணிக்கு கெங்கவல்லி வந்தபோது, 'கியர் ராடு' உடைந்ததால், இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடம்பூர் செல்லும் மாணவ, மாணவியர் இறக்கிவிடப்பட்டனர். ஆனால் பஸ்சை எடுத்துச்செல்ல, மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கெங்கவல்லி போலீசார் வந்து பேச்சு நடத்தினர். டிரைவர், கியர் ராடை, வெல்டிங் வைத்து வருவதாக கூறினார். பின் பஸ்சை விடுவித்தனர். ஒரு மணி நேரத்துக்கு பின், பஸ்சை சரிசெய்து வந்ததால், மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு, கடம்பூர் வழியே ஆத்துார் சென்றது.

