/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆராய்ச்சி திறன் மேம்பாடுபேராசிரியர்களுக்கு பயிற்சி
/
ஆராய்ச்சி திறன் மேம்பாடுபேராசிரியர்களுக்கு பயிற்சி
ஆராய்ச்சி திறன் மேம்பாடுபேராசிரியர்களுக்கு பயிற்சி
ஆராய்ச்சி திறன் மேம்பாடுபேராசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : பிப் 13, 2025 01:15 AM
ஆராய்ச்சி திறன் மேம்பாடுபேராசிரியர்களுக்கு பயிற்சி
சேலம்:சீரகாபாடி விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில், பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி திறன் மேம்பாட்டு பயிற்சி, கல்லுாரி வளாகத்தில் பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, இரு நாட்கள் நடத்தப்பட்டன. துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்றார்.
சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையின் ஆராய்ச்சி விஞ்ஞானி தசரதி, விநாயகா மிஷன் மருந்தியல் கல்லுாரி பேராசிரியர் அருள், ஆராய்ச்சி கட்டுரை எழுதுதல், வெளியிடுதல் குறித்து பேசினர்.
துறையின் ஆராய்ச்சி குழு உறுப்பினர்களான முனைவர் ஸ்ரீவித்யா, முனைவர் பிரியங்கா, லிங்காஸ், இந்திரா, நிரஞ்சன், அருண்குமார் ஆகியோர், சுகாதாரத்துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சி சார்ந்த அடிப்படை நுணுக்கங்கள் குறித்து பேசினர். இதன்மூலம் துறையை சேர்ந்த பேராசிரியர்கள் பயனடைந்தனர். முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை, துறை பேராசிரியை தமிழ்சுடர், இணை பேராசிரியர் சதீஷ்குமார் செய்திருந்தனர்.