/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொத்தடிமை தொழிலாளர் ஒழிக்க உறுதிமொழி
/
கொத்தடிமை தொழிலாளர் ஒழிக்க உறுதிமொழி
ADDED : பிப் 20, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொத்தடிமை தொழிலாளர் ஒழிக்க உறுதிமொழி
வீரபாண்டி:கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை ஒட்டி, சேலம் தொன்போஸ்கோ அன்பு இல்லம் சார்பில், ஆட்டையாம்பட்டியில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அன்பு இல்ல இயக்குனர் கஸ்மீர் ராஜ் தலைமை வகித்தார்.
அதில் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்க முன்வருவோம்; 20230க்குள், 100 சதவீதம் ஒழிக்க வேண்டும்; கொத்தடிமை தொழிலாளர் குறித்து தகவல்களை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்களை மீட்போம் என உறுதிமொழி எடுத்து கையெழுத்திட்டனர். சேலம் மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் இளையராஜா, நேஷனல் லா பவுண்டேஷன் நிறுவனர் சேதுபதி பங்கேற்றனர்.

