/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காசநோயால் பாதிக்கப்பட்டகுடும்பத்தினருக்கு பரிசோதனை
/
காசநோயால் பாதிக்கப்பட்டகுடும்பத்தினருக்கு பரிசோதனை
காசநோயால் பாதிக்கப்பட்டகுடும்பத்தினருக்கு பரிசோதனை
காசநோயால் பாதிக்கப்பட்டகுடும்பத்தினருக்கு பரிசோதனை
ADDED : பிப் 22, 2025 01:27 AM
காசநோயால் பாதிக்கப்பட்டகுடும்பத்தினருக்கு பரிசோதனை
தலைவாசல்:காச நோயால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு அதன் தாக்கம் குறித்து, தலைவாசல், சிறுவாச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'ஸ்கின் டெஸ்ட்' எனும் பரிசோதனை முகாம், முதல்முறை நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் பன்னீர்செல்வம், மருத்துவ அலுவலர் லதீஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினர், 80 பேருக்கு, 'ஸ்கின் டெஸ்ட்' பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து காசநோய் பற்றிய விழிப்புணர்வு, அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள், சலுகைகள், 'ஸ்கின் டெஸ்ட்' குறித்து எடுத்துரைத்தனர். முதுநிலை காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் தினேஷ்பாபு, சுகாதார பார்வையாளர் பவித்ரன் உள்பட பலர் பங்கேற்றனர்.