/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பேரூர் செயலர்கள் நியமனம்இ.பி.எஸ்., அறிவிப்பு
/
பேரூர் செயலர்கள் நியமனம்இ.பி.எஸ்., அறிவிப்பு
ADDED : பிப் 23, 2025 01:31 AM
பேரூர் செயலர்கள் நியமனம்இ.பி.எஸ்., அறிவிப்பு
ஆத்துார்:அ.தி.மு.க.,வின் செந்தாரப்பட்டி பேரூர் செயலராக இருந்த பழனிசாமி, தம்மம்பட்டி பேரூர் செயலராக இருந்த ஸ்ரீகுமரன், சில மாதங்களுக்கு முன் மாரடைப்பில் இறந்தனர்.
தொடர்ந்து புறநகர் மாவட்டத்தில் கட்சி பொறுப்புகளில் இருந்து இறந்தவர்கள், கட்சி பணியில் செயல்பாடின்றி உள்ள நிர்வாகிகள், மாற்று கட்சிகளில் இருந்து வந்த முக்கிய நபர்கள் குறித்து கள ஆய்வு செய்து, அக்கட்சி தலைமை, பொறுப்பு வழங்கி வருகிறது.
அதன்படி, பொதுச்செயலர், இ.பி.எஸ்., நேற்று வெளியிட்ட அறிக்கை: வாழப்பாடி பேரூர் செயலராக இருந்த சிவக்குமார், சேலம் புறநகர் மாவட்ட வர்த்தக அணி இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாழப்பாடி பேரூர் செயலராக குபேந்திரன், தம்மம்பட்டி பேரூர் செயலர் ரமேஷ்குமார், செந்தாரப்பட்டி பேரூர் செயலர் பொன்னுசாமி, மாவட்ட ஜெ., பேரவை பொருளாளர் பார்த்திபன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாவட்ட துணைச்செயலர் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆத்துாரை சேர்ந்த, நகராட்சி கவுன்சிலர் வரதராஜன், மாநில வர்த்தக அணி துணைச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.