ADDED : மார் 01, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முடி திருத்தும் கட்டணம் உயர்வு
மேட்டூர்:மேட்டூர் நகர மருத்துவர் நலச்சங்கம், முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மாத ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் மார்ச், 1 முதல் சங்க நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு, தலைவராக ராஜா, செயலராக சந்திரசேகர், பொருளாளராக ராஜூ, துணைத்தலைவராக மகேந்திரன், துணை செயலராக சுரேஷ் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து மார்ச் 1 முதல், கட்டிங், ேஷவிங், டை - 400 ரூபாய், கட்டிங், ேஷவிங் - 220, கட்டிங் - 150, ேஷவிங் - 80, சிறுவர் கட்டிங் - 130 ரூபாய் என கட்டணம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.