ADDED : மார் 02, 2025 01:25 AM
காலாவதி பாலிசி புதுப்பிக்க முகாம்
சேலம்:சேலம் கிழக்கு கோட்ட, முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் அறிக்கை:காலாவதி பாலிசிகள் புதுப்பித்தலுக்கு சிறப்பு முகாம், மார்ச், 1(நேற்று) முதல் மே, 31 வரை அனைத்து அஞ்சலகங்களில் நடக்கிறது. பாலிசிகளை புதுப்பிக்கும்போது செலுத்த வேண்டிய தாமத கட்டணத்தில், 25 முதல், 30 சதவீத தள்ளுபடியை அஞ்சல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லட்சம் ரூபாய் வரை செலுத்தப்படும் பிரீமிய கட்டணத்துக்கு அதிகபட்சம், 2,500 ரூபாய் தள்ளுபடி உண்டு. அதேபோல், ஒரு லட்சத்தில் இருந்து, 3 லட்சம் ரூபாய் வரை, 3,000 ரூபாய்; 3 லட்சம் முதல், அதற்கு மேல், 3,500 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். அதனால் பாலிசியை புதுப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால், நல்ல உடல் நலம் இருப்பதற்கான சான்றிதழ், புதுப்பிப்பதற்கான விண்ணப்ப படிவத்துடன், அருகே உள்ள தபால் நிலையத்தை அணுகவும்.