/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீ.ஜீ.விகாஸ் பள்ளியில்மழலையருக்கு பட்டமளிப்பு வி
/
வீ.ஜீ.விகாஸ் பள்ளியில்மழலையருக்கு பட்டமளிப்பு வி
ADDED : மார் 09, 2025 01:52 AM
வீ.ஜீ.விகாஸ் பள்ளியில்மழலையருக்கு பட்டமளிப்பு விழா
பனமரத்துப்பட்டி:-மல்லுார் வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியில், மழலையர் கல்வி முடிந்து, 1ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. மல்லுார் கல்வி அறக்கட்டளை தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கணேஷ் வரவேற்றார். மல்லுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் பேசினார்.
பள்ளி இயக்குனர்கள், நிர்வாகத்தினர், மழலையர்களுக்கு பட்டம், பதக்கம், சான்றிதழ் வழங்கினர். முதன்மை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, பள்ளி சிறப்பு குறித்து பெற்றோருக்கு விளக்கினார். பள்ளி நிர்வாக அலுவலர் வினோத்குமார், ஏற்பாடுகளை செய்தார். மழலையர் பெற்ற பட்டம், பதக்கங்களை பார்த்து, பெற்றோர் மகிழ்ந்தனர். மழலையர் கல்வி ஒருங்கிணைப்பாளர் சகுந்தலா உள்பட பலர் பங்கேற்றனர்.