/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலியல் குற்றத்தை தடுக்கக்கோரித.வெ.க., ஆர்ப்பாட்டம்
/
பாலியல் குற்றத்தை தடுக்கக்கோரித.வெ.க., ஆர்ப்பாட்டம்
பாலியல் குற்றத்தை தடுக்கக்கோரித.வெ.க., ஆர்ப்பாட்டம்
பாலியல் குற்றத்தை தடுக்கக்கோரித.வெ.க., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 09, 2025 01:54 AM
பாலியல் குற்றத்தை தடுக்கக்கோரித.வெ.க., ஆர்ப்பாட்டம்
சேலம்:-சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, த.வெ.க., சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட செயலர் பார்த்திபன் தலைமை வகித்தார். தொடர்ந்து ஊர்வலமாக வந்து, காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்செயல்களை தடுக்க வேண்டும்; பெண்களுக்கு சலுகைகள் வேண்டாம். பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என, கோஷம் எழுப்பினர். மாநகர் மகளிர் அணி மத்திய செயலர் காவியா, மாநகர் மகளிர் அணி பொறுப்பாளர் சுந்தரவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, போலீசார் தெரிவித்தனர்.
அதேபோல் சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., சார்பில் மாவட்ட செயலர் வெங்கடேசன் தலைமையில் கட்சியினர், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து உடையார்பாளையம் வழியே காந்தி சிலை வரை ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். பின் பெண்களுக்கு எதிரான குற்றங்களை, மத்திய, மாநில அரசுகள் தடுக்க தவறியதாக கோஷம் எழுப்பினர்.