/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
/
குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
ADDED : மார் 19, 2025 01:29 AM
குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
இடைப்பாடி:கொங்கணாபுரம், கச்சுப்பள்ளி ஊராட்சி வடுகப்பட்டியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இரு மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து மக்கள், கொங்கணாபுரம் பி.டி.ஓ.,விடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் அதே பகுதியில், கொங்கணாபுரம் - இளம்பிள்ளை சாலையில் காலி குடங்களுடன் நேற்று காலை, 8:10 மணிக்கு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியே வந்த அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. கொங்கணாபுரம் போலீசார், பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்
பட்டது.
குழந்தை நகர்
அதேபோல் காடையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து, 4வது வார்டு குழந்தை நகரில், சீரான குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி நேற்று காலை, 11:00 மணிக்கு காலிக்
குடங்கள், காஸ் சிலிண்டருடன், பொம்மியம்பட்டி - காடையாம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தீவட்டிப்பட்டி போலீசார், காடையாம்பட்டி வருவாய்த்
துறையினர், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் பொற்கொடி பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனால், 11:45 மணிக்கு அனைவரும் கலைந்து
சென்றனர்.
சாக்கடை வசதி கேட்டுசாலை மறியலுக்கு முயற்சிசேலம்:சேலம், ஜாகீர் அம்மாபாளையம், தெய்வானை நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு சாக்கடை வசதி இல்லாததால், அப்பகுதி பெண்கள், நேற்று மறியலில் ஈடுபட
முயன்றனர். இதை அறிந்து வந்த சூரமங்கலம் போலீசார், 2வது வார்டு கவுன்சிலர் பன்னீர்செல்வம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி மறியலை கைவிட கேட்டுக்கொண்டார். இதனால் மக்களும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'கடந்த, 25 ஆண்டாக சாக்கடை இல்லாததால் கழிவுநீர், வீடு முன்பும், தெருக்களிலும் செல்கிறது. இதுகுறித்து கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், உயர் அதிகாரிகளிடம் பலமுறை மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இனியும் நடவடிக்கை இல்லை எனில், ஆதார், வாக்காளர் உள்ளிட்ட கார்டுகளை ஒப்படைத்து போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.

