/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மான்களால் திருப்பிய டிரைவர்ஏரிக்கரையில் கவிழ்ந்தது பஸ்
/
மான்களால் திருப்பிய டிரைவர்ஏரிக்கரையில் கவிழ்ந்தது பஸ்
மான்களால் திருப்பிய டிரைவர்ஏரிக்கரையில் கவிழ்ந்தது பஸ்
மான்களால் திருப்பிய டிரைவர்ஏரிக்கரையில் கவிழ்ந்தது பஸ்
ADDED : ஏப் 02, 2025 01:45 AM
மான்களால் திருப்பிய டிரைவர்ஏரிக்கரையில் கவிழ்ந்தது பஸ்
தலைவாசல்,:ஆத்துார் கிளை பணிமனையை சேர்ந்த அரசு டவுன் பஸ்(தடம் எண்: 39), கைகளத்துார் -- நுாத்தப்பூர் சாலையில் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு ஆத்துார் நோக்கி வந்து கொண்டிருந்தது. தெடாவூரை சேர்ந்த, டிரைவர் சிவக்குமார், 40, ஓட்டினார்.
சிறுநிலா பஸ் ஸ்டாப் பகுதியில் வந்தபோது, மான்கள் கூட்டமாக சாலையை கடந்தன. மான்கள் மீது மோதாமல் இருக்க, டிரைவர், பஸ்சை திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ்சில் பயணித்த, 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பஸ், பொக்லைன் மூலம் மீட்கப்பட்டது. கைகளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.