/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில்தேர் திருவிழா நடத்த ஆலோசனை
/
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில்தேர் திருவிழா நடத்த ஆலோசனை
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில்தேர் திருவிழா நடத்த ஆலோசனை
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில்தேர் திருவிழா நடத்த ஆலோசனை
ADDED : ஏப் 04, 2025 01:38 AM
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில்தேர் திருவிழா நடத்த ஆலோசனை
இடைப்பாடி:இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர் திருவிழா சித்திரை மாதம் நடக்கும். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். அதில் அடுத்த மாதம், 2 முதல், 14 வரை தேர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கடந்த ஆண்டு தேர் திருவிழா நடத்திய விழா குழுவினர், முறையான வரவு - செலவு அறிக்கையை கொடுக்க வேண்டும் என கேட்டு சிலர் வாக்குவாதம் செய்தனர். அதேபோல் திருவிழாவில் வியாபாரம் செய்யும் கடைக்காரர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க தனியே ஏலம் விட கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் ஏலம் விடாமல் விழா குழுவினரே கட்டணம் நிர்ணயித்து கடைக்காரர்களை அனுமதிப்பது; கடந்த ஆண்டு நடந்த விழா குழுவின் வரவு - செலவு கணக்கை, இந்த ஆண்டு திருவிழா முடிந்தவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.