/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோர்ட்டில் மனைவியை தாக்கியவர் மீது வழக்கு
/
கோர்ட்டில் மனைவியை தாக்கியவர் மீது வழக்கு
ADDED : ஏப் 06, 2025 01:23 AM
கோர்ட்டில் மனைவியை தாக்கியவர் மீது வழக்கு
சேலம்:சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் பூஜா, 26. இவர், திருச்செங்கோட்டை சேர்ந்த கோகுல் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்கள் இடையே கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு, சேலம் குடும்ப நல நீதிமன்றத்தில் நடக்கிறது. கடந்த, 28ல் விசாரணைக்கு இருவரும் நீதிமன்றம்
வந்தனர். அங்குள்ள கவுன்சிலிங் அறை அருகே நின்றிருந்த பூஜாவை, கோகுல் தாக்கி, அவரது மொபைல் போனை பறித்துள்ளார். பூஜா நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தொழிலாளி கைதுஅதேபோல் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெகதீஷ், 32. இவரது மனைவி சசிராணி, 30. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஜெகதீஷூக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால், அடிக்கடி தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபம் அடைந்த சசிராணி, களரம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் அங்கு சென்ற ஜெகதீஷ், தகராறு செய்து மனைவியை தாக்கியுள்ளார். அவர் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார், ஜெகதீைஷ கைது செய்தனர்.