/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காஷ்மீரில் இறந்த அக்னிபாத் வீரர்உடலுக்கு அஞ்சலி
/
காஷ்மீரில் இறந்த அக்னிபாத் வீரர்உடலுக்கு அஞ்சலி
ADDED : ஏப் 10, 2025 01:09 AM
காஷ்மீரில் இறந்த அக்னிபாத் வீரர்உடலுக்கு அஞ்சலி
மேட்டூர்:சேலம் மாவட்டம் மேச்சேரி, மல்லிகுந்தத்தை சேர்ந்த முருகன் - சாந்தி தம்பதியரின் இளைய மகன் கோகுல்சக்தி, 21. திருமணம் ஆகவில்லை. இவர், 11 மாதங்களுக்கு முன், இந்திய ராணுவத்தில், அக்னிபாத் வீரராக சேர்ந்தார். தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அவர், கடந்த, 7ல் இறந்து விட்டதாக, ராணுவ அதிகாரிகளிடம் இருந்து அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது.
நேற்று மதியம், 11:30 மணிக்கு அவரது சடலம் மல்லிகுந்தம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு கோவை ராணுவ அதிகாரிகள், மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமாரன், தாசில்தார் ரமேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பெற்றோர், உறவினர், நண்பர்கள் அஞ்சலிக்கு பின் மதியம், 1:30 மணிக்கு அவரது உடல், மல்லிகுந்தம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

