/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்திடாஸ்மாக் ஊழியர் ஆர்ப்பாட்டம்
/
பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்திடாஸ்மாக் ஊழியர் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்திடாஸ்மாக் ஊழியர் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்திடாஸ்மாக் ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 11, 2025 01:43 AM
பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்திடாஸ்மாக் ஊழியர் ஆர்ப்பாட்டம்
சேலம்:டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், 22 ஆண்டாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களை, பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தினர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சுகமதி, டாஸ்மாக் எஸ்.சி., - எஸ்.டி., பணியாளர் சங்க மாநில தலைவர் சந்திரன், டாஸ்மாக் பணியாளர் சங்க சேலம் மாவட்ட தலைவர் திருமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் முருகேசன் கூறியதாவது:
காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை தனி ஒரு முகமை மூலம் செயல்படுத்த வேண்டும். டாஸ்மாக் விற்பனை தொகையை சென்னையை போன்று அனைத்து மாவட்டங்களிலும் வங்கி மூலம் நேரடியாக வந்து வசூலிக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, அரசு பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.