/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
/
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : நவ 23, 2025 01:10 AM
சேலம், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே அணைமேடு ராஜமுருகன் கோவிலில், 56 அடி உயர முருகன் சிலை கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் அருகே உள்ள சரபங்கா ஆற்று பகுதி
யில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் தொடங்கியது.
இதில், பம்பை, மேளதாளம் முழங்க, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து சேலம் சாலையை கடந்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, பக்தர்கள் எடுத்து வந்த தீர்த்தத்தால் ராஜமுருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை, 6:00- மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாகம், வாஸ்துசாந்தி, கும்பலங்காரம் செய்து முதல்கால யாக பூஜை நடந்தது.
தாரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை, 4:30- மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி செய்து, காலை, 6:45 மணிக்கு மேல், 7:45 மணிக்குள் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது.