/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இறைச்சி கடைகளில் கூட்டம்கிலோவுக்கு ரூ.100 விலை உயர்வு
/
இறைச்சி கடைகளில் கூட்டம்கிலோவுக்கு ரூ.100 விலை உயர்வு
இறைச்சி கடைகளில் கூட்டம்கிலோவுக்கு ரூ.100 விலை உயர்வு
இறைச்சி கடைகளில் கூட்டம்கிலோவுக்கு ரூ.100 விலை உயர்வு
ADDED : ஜன 17, 2025 01:26 AM
இறைச்சி கடைகளில் கூட்டம்கிலோவுக்கு ரூ.100 விலை உயர்வு
சேலம், :பொங்கல் பண்டிகையான, கடந்த, 14ல், சூரிய பொங்கல் வழிபாடு செய்வதால் அசைவ உணவை பலரும் விரும்புவதில்லை. நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தையொட்டி, இறைச்சி கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தன. கரிநாளான நேற்று, காலை முதலே இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. பண்டிகையின்போது ஆடுகள் தேவை அதிகரிப்பதால், விலை கூடுவது வழக்கம். அதன்படி சேலம் மாநகர பகுதிகளில் நேற்று, ஆட்டிறைச்சி கிலோ, 850 முதல், 950 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரம் வரை, 750 முதல், 850 ரூபாய்க்கே விற்பனையானது. விலை அதிகரித்தபோதும் விற்பனை குறையவில்லை. அதேபோல் மீன், கோழி கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.