/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மேட்டூர் அணை பாசன நீர்ஜூன் 12ல் திறக்கப்படும்'
/
'மேட்டூர் அணை பாசன நீர்ஜூன் 12ல் திறக்கப்படும்'
ADDED : ஏப் 11, 2025 01:12 AM
'மேட்டூர் அணை பாசன நீர்ஜூன் 12ல் திறக்கப்படும்'
மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. ஆண்டுதோறும் ஜூன், 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க, அணை நீர்மட்டம், 90 அடிக்கு மேல் இருக்க வேண்டும். நேற்று நீர்மட்டம், 107.79 அடியாக இருந்தது. தற்போது அணை, 16 கண் மதகு, கசிவுநீர் சுரங்கம், 5 கண் மதகு பகுதிகளில் சீரமைப்பு பணி நடக்கிறது. இப்பணியை, நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மங்கத்ராம் சர்மா நேற்று பார்வையிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: அணையில் பாசனத்துக்கு திறக்க போதிய நீர் உள்ளதால், குறித்தபடி ஜூன், 12ல் திறக்கப்படும். தற்போது அணையில், 20 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. 2 மாதத்துக்கு முன் தொடங்கப்பட்டது. பாசன நீர் திறந்தால் சீரமைப்பு பணி நிறுத்தப்படும். மீண்டும் பாசன நீர் நிறுத்திய பின், சீரமைப்பு பணி தொடங்கும். அணையில் கூடுதல் சீரமைப்பு பணி தொடங்க கேட்டுள்ளனர். அப்பணி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

