/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உழவர் சந்தைகளில் ரூ.1.23 கோடிக்கு விற்பனை
/
உழவர் சந்தைகளில் ரூ.1.23 கோடிக்கு விற்பனை
ADDED : ஜன 30, 2025 01:08 AM
உழவர் சந்தைகளில் ரூ.1.23 கோடிக்கு விற்பனை
சேலம்:சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, மேச்சேரி, மேட்டூர் உள்பட, 13 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. நேற்று தை அமாவாசை என்பதால், முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுக்க, வீடுகளில் சுவாமிக்கு பூஜை செய்ய, காய்கறி, பழங்களை அதிகளவில் வாங்க, உழவர் சந்தைகளில் மக்கள் குவிந்தனர். பழம், தேங்காய், வாழை இலை, அகத்திக்கீரை, பூசணிக்காய், கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்டவை அதிகமாக விற்பனையாகின. மாவட்டத்தில் உள்ள, 13 உழவர் சந்தைகளில், 299 டன் காய்கறி, பழங்கள் மூலம், 1.23 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
அதிகபட்சமாக தாதகாப்பட்டி உழவர் சந்தையில், 22.67 லட்சம் ரூபாய், குறைந்தபட்சமாக இளம்பிள்ளை உழவர்சந்தையில், 6.14 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட், டவுன் ஆற்றோர மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் விற்பனை அமோகமாக நடந்தது.