/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மீனாட்சி சொக்கநாதர் கோவிலின் 16 சிலைகள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைப்பு

ADDED : ஜூலை 23, 2024 01:05 AM
மேட்டூர் : மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் இருந்த, 16 ஐம்பொன் சிலைகள் நேற்று சேலம் சிலைகள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேட்டூர், ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே மேட்டூர் மேற்கு நெடுஞ்சாலையோரம் மீனாட்சி சொக்கநாதர், ஞான தண்டாயுத-பாணி கோவில் உள்ளது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் குடமு-ழுக்கு நடந்து, 35 ஆண்டு ஆகிறது. கோவிலை புனரமைக்க அற-நிலையத்துறை சார்பில், 2.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு ஒதுக்-கப்பட்டது. அதற்காக கடந்த மார்ச் 20ல் காலை, 6:00 மணிக்கு, பாலஸ்தாபன விழா, மஹாதீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் எம்.எல்.ஏ., சதாசிவம் தலை-மையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பக்தர்களிடம், 3 கோடி ரூபாய் நன்கொடை திரட்டி கணபதி, காலபைரவர், தனித்தனி சன்னதிகள் உள்ளிட்ட, 20 பணிகள் மேற்கொள்ள முடிவு செய்-யப்பட்டன.
தற்போது சீரமைப்பு பணிகள் துவங்கிய நிலையில் நேற்று கோவிலின் தனி அறையில் இருந்த பழமையான, 16 ஐம்பொன் சிலைகள் செயல் அலுவலர் (பொ) மாதேஷ், எம்.எல்.ஏ., சதா-சிவம் முன்னிலையில் எடுக்கப்பட்டது. அனைத்து சிலைகளும் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வளா-கத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு செல்-லப்பட்டன.